சாம்சங் -ன் பட்ஜெட் கைப்பேசி - கேலக்ஸி எம் 04 இந்தியச் சந்தையில் அறிமுகம்

December 17, 2022

சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை கைபேசி மாடலான கேலக்ஸி எம் 04, நேற்று முதல் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை, 8499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் இணைய வர்த்தகத் தளத்தில் இதன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பாரத ஸ்டேட் வங்கியின் கார்டு மூலம் வாங்கினால் 1000 ரூபாய் உடனடி சலுகை வழங்கப்படுகிறது. இந்த குறைந்த விலை கைபேசியின் சிறப்பு அம்சங்கள் வருமாறு: 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு திறன், 6.5 […]

சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை கைபேசி மாடலான கேலக்ஸி எம் 04, நேற்று முதல் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை, 8499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் இணைய வர்த்தகத் தளத்தில் இதன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பாரத ஸ்டேட் வங்கியின் கார்டு மூலம் வாங்கினால் 1000 ரூபாய் உடனடி சலுகை வழங்கப்படுகிறது.

இந்த குறைந்த விலை கைபேசியின் சிறப்பு அம்சங்கள் வருமாறு: 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு திறன், 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 13 மெகா பிக்சல் கேமரா, 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, 5000 mAh பேட்டரி திறன். மேலும், இந்த கைப்பேசி, ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆண்ட்ராய்டு 14 வரை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த கைபேசியில் 1 டெராபைட் வரை சேமிப்பு திறனை அதிகரித்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu