2500 ஆண்டு பழமையான சமஸ்கிருத புதிருக்கு இந்திய மாணவர் ஒருவர் விடை கண்டுபிடித்துள்ளார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட், லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக படித்து வந்தார். மேலும் சமஸ்கிருத மொழியில் காணப்படும் பல்வேறு புதிர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது 2500 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் கூறப்பட்ட இலக்கண புதிர் குறித்து படித்தார்.
அந்த புதிர் சமபலம் கொண்ட இரண்டு விதிகளை பற்றியது. இதில் எந்த விதி வெற்றி பெறும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க இந்திய மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் முயற்சி மேற்கொண்டார். தொடக்கத்தில் அவருக்கு எந்த முடிவும் கிட்டவில்லை. என்றாலும் முயற்சியை கைவிடாத அவர் தொடர்ந்து புதிருக்கு விடை கண்டுபிடிக்க முயன்றார். சமீபத்தில் அவர் அந்த புதிருக்கு விடை கண்டுபிடித்தார். இலக்கணப்படி சரியான சொற்களை உருவாக்கியதன் மூலம் அதன் அர்த்தத்தையும் அவர் தெரிவித்தார்.