சீன ஆய்வுக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை

August 8, 2022

இந்தியாவின் ஆட்சேபனையால் சீன ஆய்வுக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டா துறைமுகமானது 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் சீனாவால் கட்டப்பட்டு குத்தகைக்கு எடுக்கப்பட்டது. இது ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் முக்கிய கப்பல் பாதைக்கு அருகில் உள்ளது. சீன ஆராய்ச்சி கப்பலான யுவான் வாங் 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11 -ம் நாளன்று வர திட்டமிடப்பட்டுள்ளது.  விண்வெளி கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 செயற்கைக்கோள், ராக்கெட் மற்றும் […]

இந்தியாவின் ஆட்சேபனையால் சீன ஆய்வுக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டா துறைமுகமானது 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் சீனாவால் கட்டப்பட்டு குத்தகைக்கு எடுக்கப்பட்டது. இது ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் முக்கிய கப்பல் பாதைக்கு அருகில் உள்ளது.
சீன ஆராய்ச்சி கப்பலான யுவான் வாங் 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11 -ம் நாளன்று வர திட்டமிடப்பட்டுள்ளது.  விண்வெளி கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 செயற்கைக்கோள், ராக்கெட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல்களை கண்காணிக்க பயன்படுகிறது. 2020 இல் இமயமலை எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய மற்றும் 4 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.  அதிலிருந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. இந்நிலையில் இந்த துறைமுகத்தை இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சீனா பயன்படுத்திக்கொள்ளும் என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியா உதவி செய்ததை க௫த்தில் கொண்ட இலங்கை அரசு ,சீன ஆய்வுக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கையில் உள்ள சீனாதூதரகத்திற்கு கடிதம் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இக்கோரிக்கைக்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் இலங்கையின் செய்தித் தொடர்பாளர், யுவான் வாங் 5 கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே ஹம்பாந்தோட்டாவில் நிறுத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu