சீன எல்லையில் இந்திய போர் விமானங்கள் குவிப்பு - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 

December 20, 2022

சீன எல்லையில் இந்திய போர் விமானங்கள் குவித்துள்ளதாக ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது. கடந்த 9-ந் தேதி சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் தவாங் பகுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி விரட்டியது. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், எல்லை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவ வீரர்கள் […]

சீன எல்லையில் இந்திய போர் விமானங்கள் குவித்துள்ளதாக ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது. கடந்த 9-ந் தேதி சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் தவாங் பகுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி விரட்டியது. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், எல்லை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்திய எல்லையை இனி யாராலும் தன்னிச்சையாக மாற்ற முடியாது. குறிப்பாக சீனாவால் எல்லை கோட்டை தாண்ட முடியாது. மேலும் அங்கு போர் விமானங்களும், டிரோன்களும் குவிக்கப்பட்டன. டிரோன்கள் மூலம் எல்லை பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்திய எல்லைக்குள் இனி சீனா நுழைவதை தடுக்கவும், இந்திய ராணுவ வீரர்கள் எல்லைக்கு விரைவாக சென்றடையவும் அருணாச்சல எல்லையில் புதிய சாலை அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu