மின் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் கடைகள், உணவகங்களை இரவு 8 மணிக்குள் மூட முடிவு

December 21, 2022

கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நீடித்து வரும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பாகிஸ்தான் எரிசக்திதுறை அதிக நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் அறிவித்தார். இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளதாவது: புதிய […]

கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நீடித்து வரும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பாகிஸ்தான் எரிசக்திதுறை அதிக நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் அறிவித்தார்.

இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளதாவது: புதிய திட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ள சந்தைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம். 20 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து சுழற்சி முறையில் வேலை செய்தால், ரூ.62 பில்லியன் வரை சேமிக்க முடியும், ஆற்றல் திறன் கொண்ட மின்விசிறிகள் மற்றும் பல்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். பெட்ரோல் நுகர்வைக் குறைக்க பாரம்பரிய மோட்டார் சைக்கிள்களுக்குப் பதிலாக மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக மின்சார பைக்குகள் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைக்க உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu