கூகுள் சேவை சில மணி நேரம் முடக்கம்

மென்பொருள் புதுப்பிப்பு சிக்கலால் உலகம் முழுவதும் கூகுள் தேடல் சேவை, இன்று காலை சில மணி நேரம் முடங்கியது. நம் வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறியுள்ள கூகுளில், முக்கியமான தகவல்கள் குறித்து அறிந்து கொள்ள தேடுவது வழக்கம். இன்று காலை 6.30 மணியளவில் கூகுள் தேடல் முடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டு, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. அமெரிக்காவை சேர்ந்த இணையதளமான டவுன் டிடெக்டர்.காம் கூறுகையில், 'ஆயிரக்கணக்கான பயனர்கள் இன்று கூகுள் தேடல் […]

மென்பொருள் புதுப்பிப்பு சிக்கலால் உலகம் முழுவதும் கூகுள் தேடல் சேவை, இன்று காலை சில மணி நேரம் முடங்கியது.

நம் வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறியுள்ள கூகுளில், முக்கியமான தகவல்கள் குறித்து அறிந்து கொள்ள தேடுவது வழக்கம். இன்று காலை 6.30 மணியளவில் கூகுள் தேடல் முடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டு, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அமெரிக்காவை சேர்ந்த இணையதளமான டவுன் டிடெக்டர்.காம் கூறுகையில், 'ஆயிரக்கணக்கான பயனர்கள் இன்று கூகுள் தேடல் சேவை முடங்கியதாக தெரிவித்துள்ளனர். பயனர்கள் கூகுள் தேடலை பயன்படுத்துகையில், ' உங்கள் வேண்டுகோளை ஏற்றுகொள்ள முடியவில்லை. தயவு செய்து 30 நொடிகளுக்கு பிறகு முயற்சி செய்யவும்' என வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கூகுள் சேவையின் தற்காலிகமாக முடக்கத்தால், அமெரிக்காவில் 30,000 பேரும், ஜப்பானில் 5,900 பேரும் பாதிப்புக்குள்ளாகினர்.

கூகுள் தேடல் மட்டுமல்லாது மேப்ஸ், போட்டோஸ், டிரைவ் உள்ளிட்ட சேவைகளும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு , அயோவாவில் உள்ள கூகுள் டேட்டா சென்டரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இருக்கலாமென இணைய செய்தி நிறுவனமான எஸ்எஃப்கேட் (Sf gate) தெரிவித்துள்ளது.

இதனிடையே கூகுள் செய்தி தொடர்பாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். செய்திக்குறிப்பில், மென்பொருள் புதுப்பிப்புச் சிக்கல் காரணமாக கூகுள் தேடல் மற்றும் மேப்ஸ் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் சிரமத்திற்கு வருந்துகிறோம். சிக்கலை விரைவாகத் தீர்க்க நாங்கள் பணிபுரிந்தோம். எங்கள் சேவைகள் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 320

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu