2023 ஆம் ஆண்டில் நிகழும் கிரகணங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 2 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் நிகழ உள்ளன.
ஏப்ரல் 20 ம் தேதி மற்றும் அக்டோபர் 14 ம் தேதி ஆகியவற்றில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதில் முதலாவது, முழு சூரிய கிரகணம் ஆகும். இது, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகும். இது, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் சில மேற்கத்திய நாடுகளில் தெரியும் என கூறப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம், மே 5ம் தேதி, பெனும்பிரல் சந்திர கிரகணமாக ஏற்படுகிறது. இதனை ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளில் காணலாம். இரண்டாவது சந்திர கிரகணம், அக்டோபர் 28ஆம் தேதி, பகுதி சந்திர கிரகணமாக ஏற்படுகிறது. இது உலகின் அநேக பகுதிகளில் காணும் படி ஏற்பட உள்ளது.