சீனாவில், மலர் வடிவில் பனிப்பாறைகள் - இணையத்தில் பகிரப்படும் புகைப்படம்

நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சோல்கேம் என்ற நபர், அண்மையில் சீனாவில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில், மலர் வடிவில் பனிப்பாறைகள் காட்சியளிக்கின்றன. இந்த புகைப்படத்துக்கு கீழே “சோங்குவா ஆற்றில் பனிப் பூக்கள்” என்று சோல்கேம் பதிவிட்டுள்ளார். வடகிழக்கு சீனாவில் உள்ள சோங்குவா ஆற்றில், இயற்கையாகவே மலர் வடிவ பனிப்பாறைகள் ஏற்பட்டுள்ளன. இந்த வினோதமான இயற்கை நிகழ்வு இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக […]

நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சோல்கேம் என்ற நபர், அண்மையில் சீனாவில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில், மலர் வடிவில் பனிப்பாறைகள் காட்சியளிக்கின்றன. இந்த புகைப்படத்துக்கு கீழே “சோங்குவா ஆற்றில் பனிப் பூக்கள்” என்று சோல்கேம் பதிவிட்டுள்ளார். வடகிழக்கு சீனாவில் உள்ள சோங்குவா ஆற்றில், இயற்கையாகவே மலர் வடிவ பனிப்பாறைகள் ஏற்பட்டுள்ளன. இந்த வினோதமான இயற்கை நிகழ்வு இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக சீனாவின் தினசரி பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “பனிப் பூக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உருவாகின்றன. பொதுவாக, முன்பனி காலத்தில், அதிகாலை நேரத்தில், செடிகளின் மீது இத்தகைய அமைப்பு உருவாகும். சுற்றுச்சூழல் வெப்பநிலை உறைநிலைக்கு கீழேயும் தரை வெப்பநிலை சற்று அதிகமாகவும் இருக்கும் நேரத்தில் இவ்வாறு பனிப் பூக்கள் ஏற்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்று, கடும் பனியால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu