சனி கிரகம் சூரியனை சுற்றிவர 29 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில், 1996 முதல் 2000 ஆண்டுகள் வரை, சனி கிரகம் சூரியனின் சுற்றுவட்டப் பாதையில் இருந்த போது, விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள ஹப்பிள் தொலைநோக்கி, பல புகைப்படங்கள் எடுத்துள்ளது. இந்தப் படங்களை நாசா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.
“சனி கிரகத்தை சுற்றி உள்ள வளையங்கள் வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக மாற்றங்களுடன் இந்த வளையங்கள் தென்படுகின்றன. இதன் மூலம், சனி கிரகத்தின் 29 ஆண்டு நீண்ட பயணம் நமது கண்ணோட்டத்தில் எத்தகைய மாறுபாட்டுடன் உள்ளது என்பதை அறிய முடியும்” என்று நாசா பதிவிட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு “ரிங் இன் தி நியூ இயர்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.