நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி 

January 5, 2023

நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என பிரதமர் மோடி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தேசிய அளவிலான முதலாவது நீர்வளத்துறை மாநாடு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தண்ணீர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நீர் ஆதாரங்களை வலுப்படுத்தி சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசுடன் பணியாற்றி நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று மோடி கூறினார். […]

நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என பிரதமர் மோடி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய அளவிலான முதலாவது நீர்வளத்துறை மாநாடு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தண்ணீர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நீர் ஆதாரங்களை வலுப்படுத்தி சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசுடன் பணியாற்றி நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று மோடி கூறினார்.

ஜியோசென்சிங், ஜியோமேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களை நீர் சேமிப்புத் துறையில் பயன்படுத்த வேண்டும். ஜல் ஜீவன் மிஷன் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவதற்கான முக்கிய வளர்ச்சி அளவுகோலாக மாறியுள்ளது என குறிப்பிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu