உலகிலேயே முதல் முறையாக தேனீக்களுக்கான தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல்

உலகிலேயே முதல் முறையாக தேனீக்களுக்கான தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி மூலம், அமெரிக்கன் பவுல் புரூட் டிசீஸ் எனப்படும் நோயில் இருந்து தேனீக்கள் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வேளாண் துறை, தலன் அனிமல் ஹெல்த் என்ற பயோடெக் நிறுவனத்திற்கு இந்த தடுப்பூசிகளை தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. Paenibacillus larvae என்ற பாக்டீரியாவால் தேனீக்களுக்கு பவுல் புரூட் வியாதி ஏற்படுகிறது. இதனால், தேன்கூடுகள் நலிந்து, தேனீக்கள் கொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த நோய் தற்போது உலகளாவிய […]

உலகிலேயே முதல் முறையாக தேனீக்களுக்கான தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி மூலம், அமெரிக்கன் பவுல் புரூட் டிசீஸ் எனப்படும் நோயில் இருந்து தேனீக்கள் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வேளாண் துறை, தலன் அனிமல் ஹெல்த் என்ற பயோடெக் நிறுவனத்திற்கு இந்த தடுப்பூசிகளை தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

Paenibacillus larvae என்ற பாக்டீரியாவால் தேனீக்களுக்கு பவுல் புரூட் வியாதி ஏற்படுகிறது. இதனால், தேன்கூடுகள் நலிந்து, தேனீக்கள் கொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த நோய் தற்போது உலகளாவிய முறையில் காணப்படுகிறது. இந்த தடுப்பூசியை ராணி தேனீக்கு வழங்குவதால் மற்ற தேனீக்களுக்கும் சென்றடைந்து, நோயிலிருந்து அனைத்து தேனீக்களும் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu