பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவக்கம்

January 9, 2023

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் துவங்கி வைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள, 2.19 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வீடுதோறும் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை […]

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் துவங்கி வைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள, 2.19 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வீடுதோறும் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், சென்னை அன்னை சத்யா நகரில் இன்று துவங்கி வைத்துள்ளார்.

ரொக்க பணத்தை கவரில் வைத்து வழங்க கூடாது என ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ரேஷன் கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு பரிசு தொகுப்பு வினியோகத்தை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவு மற்றும் கூட்டுறவு துறைகள் வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu