ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் வகித்த அமைச்சரவை பதவிகளுக்கு எதிராக தற்போதைய பிரதமரான அந்தோனி அல்பானீஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன், கோவிட் -19 தொற்றுநோயின் போது, சில துறைகளுக்கு மந்திரியாக இரகசியமாக நியமிக்கப்பட்டார். அதையறிந்த ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமரான அந்தோனி அல்பானீஸ் இது குறித்து சட்ட ஆலோசனையை நாடியுள்ளார். மேலும் சட்ட அதிகாரியிடம் ஆலோசனை கேட்ட அல்பானீஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மந்திரிகள் கவர்னர் ஜெனரல் முன்னிலையில் பதவியேற்கிறார்கள். ஆனால் மோரிசனின் இந்த கூடுதல் அமைச்சரவை பதவிகள் குறித்து மற்ற உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
இது பற்றி கவர்னர் ஜெனரல் அலுவலகம் ஒ௫ மின்னஞ்சல் அறிக்கையில், இந்த நியமனங்கள் அரசியலமைப்பின் கீழ் செல்லுபடியாகும் என்றும், பதவியேற்பு விழா தேவையில்லை என்றும், அவற்றை விளம்பரப்படுத்துவது அரசாங்கத்தின் வி௫ப்பம் என்றும் கூறியி௫ந்தது. மேலும் கவர்னர் ஜெனரல் , மற்ற துறைகளை மோரிசன் நிர்வகிப்பதற்கு அரசாங்கத்தின் ஆலோசனைப்படி செயல்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார். அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டில், சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட்டுடன் சேர்ந்து, மோரிசன் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்று ஆஸ்திரேலிய செய்தித்தாள் கூறுகிறது. மேலும் அத்துடன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்பு 2021 இல் வள அமைச்சகத்தின் நிர்வாகியாக அவர் நியமிக்கப்பட்டதாக செய்தி கூறுகிறது.