ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 61 ரூபாயில் புதிய 5ஜி இணைய சேவை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
5ஜி இணைய சேவை கட்டணத் திட்டங்களுக்காக, ‘மை ஜியோ’ செயலியில் புதிதாக ‘5ஜி அப்கிரேட்’ என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 61 ரூபாய்க்கான திட்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இதுவே குறைந்தபட்ச 5ஜி இணைய சேவை திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இது ரிலையன்ஸ் ஜியோ சந்தா நாள் முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 119, 149, 179, 199, 209 ரூபாய்களில் ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த 61 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 239 ரூபாய்க்கு மேலாக ப்ரீபெய்ட் கட்டணம் செலுத்துபவர்கள், கூடுதல் கட்டணம் எதுவும் இன்றி 5ஜி இணைய சேவையை பெறலாம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.