பள்ளிவாசல்கள் பராமரிப்பு மானிய தொகை ரூ.10 கோடியாக உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் Major Repair Grant-MRG என்ற மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை உறுப்பினர் ஜவாஹிருல்லா வைத்தார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.5 கோடியாக இருந்த இந்த மானிய தொகையை திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சென்ற ஆண்டு, ரூ.6 கோடியாக உயர்த்தி வழங்கினோம். தற்போது, பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் Major Repair Grant-MRG மானியத்தொகை வரும் நிதியாண்டு முதல் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.