மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து 26-ம் தேதி அறிமுகம்

January 23, 2023

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் 26-ம் தேதி அறிமுகம் செய்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கு இன்கோவாக் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அனைத்து கட்ட பரிசோதனைகளும் வெற்றி அடைந்த நிலையில், அவசர கால அடிப்படையில் இன்கோவாக் தடுப்பு மருந்தை பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து […]

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் 26-ம் தேதி அறிமுகம் செய்கிறது.

பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கு இன்கோவாக் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அனைத்து கட்ட பரிசோதனைகளும் வெற்றி அடைந்த நிலையில், அவசர கால அடிப்படையில் இன்கோவாக் தடுப்பு மருந்தை பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், மூக்கின் வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தில் அறிமுகம் செய்ய உள்ளோம். மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் மருந்து ரூ.325 விலையிலும் தனியாருக்கு ரூ.800 விலையிலும் விற்பனை செய்யப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu