நாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் முதன் முறையாக மூவர்ண கொடியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றினார்.
நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் குதிரைப்படை சூழ வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வை பிரதமர் மோடி வரவேற்றார். குடியரசு தலைவருடன் வந்த எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியை பிரதமர் மோடி வரவேற்றார். பதவியேற்றபின் முதன் முறையாக திரௌபதி முர்மு மூவர்ண கோடியை ஏற்றினார்.
முதன் முறையாக கடமை பாதையில் குடியரசு தினவிழா நடைபெற்றது. கொடியேற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. விஜய் சவுக் பாதையில் இருந்து கடமை பாதை வழியாக அணிவகுப்பு நடத்தப்பட்டது. கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.