விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமை வெளிச்சந்தையில் விற்பனை

January 26, 2023

விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்ததால், அதன் விலை உயரத் தொடங்கியது. விலை உயர்வை கட்டுப்படுத்த கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதையும் மீறி, கோதுமை விலை உயர்ந்தது. சராசரியாக கிலோ ரூ.50 ஆக அதிகரித்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், தனது சேமிப்பில் இருந்து 30 லட்சம் […]

விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்ததால், அதன் விலை உயரத் தொடங்கியது. விலை உயர்வை கட்டுப்படுத்த கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதையும் மீறி, கோதுமை விலை உயர்ந்தது. சராசரியாக கிலோ ரூ.50 ஆக அதிகரித்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், தனது சேமிப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை மத்திய உணவு அமைச்சகம் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும்.

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகம், அந்த கோதுமையை மாவு மில்கள், தனியார் வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். வெளிச்சந்தையில் கோதுமை வரத்தை அதிகரித்து அதன் விலையை குறைப்பதுதான் இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu