பட்ஜெட் விவரங்களை அறிந்து கொள்ள மொபைல் செயலி - நிதி அமைச்சகம் அறிவிப்பு

January 27, 2023

இந்தியாவின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. இது ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி, 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு, காகிதம் இல்லாத முறையில் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பட்ஜெட் அறிக்கையை மொபைல் செயலியில் வெளியிட உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

இந்தியாவின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. இது ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி, 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு, காகிதம் இல்லாத முறையில் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பட்ஜெட் அறிக்கையை மொபைல் செயலியில் வெளியிட உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்' என்ற பெயரில் கைபேசி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் ஆவணம் வெளியாகும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பட்ஜெட் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் படித்து தெரிந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த செயலியை இந்தியா பட்ஜெட்- https://www.indiabudget.gov.in/ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விவரங்கள் மட்டுமல்லாது, நாடாளுமன்ற இரு அவைகளின் அன்றாட அலுவல் நடவடிக்கைகள், அவை உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த செயலியில் தரப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 1947 முதல் தற்போது வரை நடைபெற்ற பட்ஜெட் விவாதங்கள் இந்த கைபேசி செயலியில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu