லூசி திட்டத்தில் மற்றொரு விண்கல் ஆய்வு திட்டம் இணைப்பு - நாசா அறிவிப்பு

January 28, 2023

வியாழன் கோளை சுற்றியுள்ள ட்ரோஜான் கற்களை ஆராய லூசி என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. இந்த விண்கலம், தற்போது 6 பில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதிதாக ஒரு விண்கல் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த விண்கலத்திற்கு நாசா இலக்கு நிர்ணயத்துள்ளது. முன்னதாக, இந்த விண்கலத் திட்டத்தில் இந்த குறிப்பிட்ட விண்கல் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நவம்பர் 1ம் தேதி, லூசி விண்கலம், சிறிய விண்கல் பெல்ட் ஒன்றுக்கு நெருக்கமாக […]

வியாழன் கோளை சுற்றியுள்ள ட்ரோஜான் கற்களை ஆராய லூசி என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. இந்த விண்கலம், தற்போது 6 பில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதிதாக ஒரு விண்கல் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த விண்கலத்திற்கு நாசா இலக்கு நிர்ணயத்துள்ளது. முன்னதாக, இந்த விண்கலத் திட்டத்தில் இந்த குறிப்பிட்ட விண்கல் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் 1ம் தேதி, லூசி விண்கலம், சிறிய விண்கல் பெல்ட் ஒன்றுக்கு நெருக்கமாக செல்லும். சுமார் 700 மீட்டர் அகலம் கொண்ட 1999 VD 57 என்ற விண்கல் குழுமம் ஆராயப்பட உள்ளது. மேலும், சிறிய தொழில்நுட்பக் கருவி மேம்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம், விண்கல் குழுமத்திற்கு மிக அருகில் லூசி விண்கலம் செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. அத்துடன், அதில் உள்ள கேமராக்கள் விண்கற்களை துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu