சென்னை ரெயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் நிறுவப்படவுள்ளது.
சென்னை கோட்டத்தில் மொத்தம் 160 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் சில ரெயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக ரெயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் சில ரெயில் நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரெயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.
வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் பழுதடைந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் மற்றும் யு.டி.எஸ். செயலி ஆகியவை பயணிகள் டிக்கெட் எடுப்பதை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன.