தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ரூ.1,081 கோடி

February 6, 2023

தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ரூ.1,081 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,081 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கு ரூ.393.44 கோடியும், 2021-22-ம் நிதியாண்டில் ரூ.224.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரயில்வேயில் 700-க்கும் மேற்பட்ட […]

தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ரூ.1,081 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,081 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கு ரூ.393.44 கோடியும், 2021-22-ம் நிதியாண்டில் ரூ.224.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரயில்வேயில் 700-க்கும் மேற்பட்ட மெயில், விரைவு,சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 52.80 கோடி பேர் பயணம் செய்தனர். இதன்மூலம், ரூ.5,247 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை உயர்வதால் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது. இதுபோல, வரும் நிதியாண்டில் பயணிகள் வசதிகள் அதிகரிக்கப்படும் என அவர்கள் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu