பாகிஸ்தான் குவெட்டா நகரில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம்

February 6, 2023

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் போலீஸ் தலைமையகம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு […]

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் போலீஸ் தலைமையகம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காவலர் குடியிருப்புகள் அதிகம் கொண்ட ஒரு பகுதியில் மசூதியில் குண்டு வெடிப்பு நடந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu