'இன்போசிஸ்' நிறுவனம், புதிதாக பணியமர்த்தியவர்களில் 600 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
இது குறித்து இத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் புதிதாக பணியில் சேர்ந்தவர்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு, அண்மையில் அவர்களுக்கு திறனறிவு தேர்வை நடத்தியது, இன்போசிஸ். இதில் தேர்ச்சியடையாத 600 ஊழியளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக பணிக்குச் சேர தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை பெற்றுள்ளவர்களுக்கு இந்த பணிநீக்க நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 6 ஆயிரம் பேரை புதிதாக இன்போசிஸ் பணியமர்த்தியது. இந்நிலையில், அடுத்த நிதியாண்டில் 50 ஆயிரம் பேர் வரை பணியமர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும்; இதில் ஏற்கனவே 40 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் தெரிவித்திருந்தார்.














