துருக்கி நாட்டிற்கு இந்தியா மருந்து, உணவு உள்ளிட்ட பொருட்கள் உதவிக்கரம்

February 7, 2023

துருக்கி நாட்டிற்கு இந்தியா மருந்து, உணவு உள்ளிட்ட பொருட்களுடன் விமானத்தை அனுப்பியது. பூகம்பத்தால் கடும் சேதங்களை சந்தித்துள்ள துருக்கி நாட்டில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில் பேரிடர் மேலாண் படை வீரர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. நூற்றாண்டுகளில் காணாத அளவிற்கு 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பத்தால் துருக்கி, சிரியா நாடுகள் அதிர்ந்தன. இடிபாடுகளில் சிக்கி 4,000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் துருக்கி […]

துருக்கி நாட்டிற்கு இந்தியா மருந்து, உணவு உள்ளிட்ட பொருட்களுடன் விமானத்தை அனுப்பியது.

பூகம்பத்தால் கடும் சேதங்களை சந்தித்துள்ள துருக்கி நாட்டில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில் பேரிடர் மேலாண் படை வீரர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. நூற்றாண்டுகளில் காணாத அளவிற்கு 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பத்தால் துருக்கி, சிரியா நாடுகள் அதிர்ந்தன. இடிபாடுகளில் சிக்கி 4,000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் துருக்கி ராணுவம் ஈடுபட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.

இந்திய பேரிடர் மேலாண் படையைச் சேர்ந்த 101 வீரர்கள் அடங்கிய 2 குழுக்கள் விமானப்படையின் சி17 விமானம் மூலம் துருக்கி விரைந்துள்ளனர். உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu