போயிங் விமான நிறுவனம் 2000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நிதி மேலாண்மை மற்றும் மனிதவளத் துறையில் இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, போயிங் நிறுவனம் பணி அமர்வுகளை மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. தற்போது, அந்த பணி அமர்வுகள் டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் பணியாளர் அமைப்பு எளிமையாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே பணியில் நீடிக்கப்படுபவர் என போயிங் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த வருடம், அமெரிக்காவில் பணிபுரியும் நிறுவனத்தின் நிதித் துறை சார்ந்த பணியாளர்கள் - சுமார் 150 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று போயிங் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.