அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தியதில் இருந்து, நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. தொடர்ச்சியாக 8 நாட்களுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவில் இருந்தன. இந்நிலையில், இன்று, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 5% உயர்வில் வர்த்தகமானது. மேலும், அதானி குழுமத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிறுவனப் பங்குகள், இன்று காலை ஏற்றத்தை பதிவு செய்தன.
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 15% உயர்ந்து, ஒரு பங்கு 1808.25 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதன் சந்தை மதிப்பு 2.06 லட்சம் கோடியாக பதிவானது. அதே வேளையில், அதானி போர்ட்ஸ் பங்குகள் 8.96% உயர்ந்து, ஒரு பங்கு 595 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதன் சந்தை மதிப்பு 1.28 லட்சம் கோடியாக பதிவானது. அதானி வில்மர் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகள் 5% உயர்ந்து, 399.4 மற்றும் 1324 ரூபாய்க்கு முறையே வர்த்தகமாயின. அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 2.1% உயர்ந்து 906.15 ரூபாய் வர்த்தகமானது.