நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை மிகவும் பாராட்டுகிறோம் என்று இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட் சுனால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஃபிராட் சுனால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 21,103 பேர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 1.40 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 6,000 கட்டிடங்கள் விழுந்ததாகவும் 3 விமான நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம் என கூறிய ஃபிராட் சுனால், இந்தியாவின் மீட்பு குழு மற்றும் உபகரணங்கள் அடங்கிய முதல் விமானம் காலை துருக்கி வந்தடைந்ததாகவும், 2-வது விமானம் இன்று மாலைக்குள் துருக்கி சென்றடையும் எனவும் தெரிவித்தார்.