செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் - நாசா பகிர்வு

February 8, 2023

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தில் புதிய விண்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே 2 முறை இது போல விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போதைய விண்கல், இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆனது என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல்லுக்கு, காகோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் அளவு ஒரு அடி அல்லது 30 சென்டிமீட்டர் அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் தனது 100 மில்லி மீட்டர் […]

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தில் புதிய விண்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே 2 முறை இது போல விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போதைய விண்கல், இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆனது என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல்லுக்கு, காகோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் அளவு ஒரு அடி அல்லது 30 சென்டிமீட்டர் அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் தனது 100 மில்லி மீட்டர் லென்ஸ் உதவியுடன் மஸ்ட் கேமராவில் விண்கல்லின் புகைப்படத்தை படம் பிடித்துள்ளது. தற்போது நாசா வெளியிட்டுள்ள புகைப்படம், இவ்வாறு எடுத்த 19 வெவ்வேறு புகைப்படங்களின் இணைப்பாகும். மேலும், பூமியின் ஒளித்தன்மைக்கு ஏற்ப, மனித கண்களால் பார்ப்பதற்கு ஏற்ப, விண்கல்லின் வண்ணம் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள கேள் கிரேட்டரை ஆய்வு செய்வதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. இந்த ரோவர் அனுப்பிய புகைப்படங்கள் மூலம், தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu