மேற்கு வங்காளத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 1,911 'குரூப்-டி' பணி நியமனங்களை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது .
மேற்கு வங்காளத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியிட நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது மாநில கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜி, தற்போதைய கல்வி இணை மந்திரி பரேஷ் அதிகாரி ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. இந்த முறைகேடு வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் காங்கோபத்யாய் விசாரித்து வந்தார். இந்த வழக்கில், முறைகேடாக சேர்க்கப்பட்ட 1,911 'குரூப்-டி' பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.