இந்தியாவில், 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வணிகப் பயன்பாட்டு வாகன விற்பனை அளவு 9 முதல் 11% வரை உயரக்கூடும் என்று கிரிஸில் மதிப்பாய்வு நிறுவனம் கணித்துள்ளது. மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில், கடந்த 2015-16ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இப்போது, உள்கட்டமைப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 4 மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, உள்கட்டமைப்புத் துறையை சார்ந்து இயங்கும் வணிக பயன்பாட்டு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இலகு ரக சரக்கு வாகனங்கள் விற்பனை 8 - 10% உயரும் என்றும், கனரக சரக்கு வாகனங்கள் விற்பனை 13 -15% உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நிகழாண்டில் கொண்டுவரப்பட உள்ள பி எஸ் 6 விதிமுறைகளின் படி ஒத்துப்போகும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், வணிக வாகன விற்பனை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.