200 அரசுப் பள்ளி மாணவர்கள் இஸ்ரோவுக்கு கல்வி பயணம் சென்றுள்ளனர்.
மதுரையில் உள்ள குயின் மீரா சர்வதேச பள்ளி சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) கல்விமுறை பயணமாக அழைத்துச் சென்றனர்.
அவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்ஷயம் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம்.எஸ்.ரமேஷ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விஷன் 2020 நிறுவனர் திருச்செந்தூரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.














