9 மாதங்களுக்கு பிறகு முழு பலத்துடன் இயங்கும் உச்சநீதிமன்றம்

February 13, 2023

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, மேலும் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது. இதையடுத்து நீதிபதிகள் ராஜேஷ் பிண்தால் […]

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, மேலும் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது.

இதையடுத்து நீதிபதிகள் ராஜேஷ் பிண்தால் மற்றும் அரவிந்த் குமார் இன்று காலை 10.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் பதவியேற்றத்தை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து முழு பலத்துடன் செயல்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu