அதானி விவகாரத்தில் நிபுணர் குழு அமைத்தால் ஏற்க தயார் - மத்திய அரசு

February 14, 2023

அதானி விவகாரத்தில் நிபுணர் குழு அமைத்தால் ஏற்க தயார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையின் உண்மை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த வெள்ளியன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக திங்கள் கிழமைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசின் தரப்பில், எதிர்காலத்தில் […]

அதானி விவகாரத்தில் நிபுணர் குழு அமைத்தால் ஏற்க தயார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையின் உண்மை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த வெள்ளியன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக திங்கள் கிழமைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசின் தரப்பில், எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் குழுவை அமைத்தால் அதில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஹிண்டன்பர்க் - அதானி விவகாரத்தை கையாளும் திறன் செபிக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்றம் குழு தொடர்பாக முன்மொழியப் பட்ட விதிமுறைகள் குறித்த அறிக்கையை புதன்கிழமைக்குள் மத்தியஅரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அடுத்தகட்ட விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu