ஏரோ இந்தியா: சூரிய எரிசக்தியில் இயங்கும் 'சூரஜ்' ட்ரோன் வெளியீடு

February 15, 2023

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா 2023 விமான கண்காட்சியில் பல்வேறு புதிய விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், ட்ரோன் உருவாக்கத்தில் புத்தாக்க நிறுவனமாக உள்ள கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், தனது 'சூரஜ்' ட்ரோனை வெளியிட்டுள்ளது. இந்த ட்ரோன் முழுக்க முழுக்க சூரிய எரிசக்தியில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் டிஆர்டிஓ தலைவரும், பாதுகாப்பு அமைச்சரின் முக்கிய ஆலோசகருமான டாக்டர். சதீஷ் ரெட்டி வெளியிட்டார். இந்த […]

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா 2023 விமான கண்காட்சியில் பல்வேறு புதிய விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், ட்ரோன் உருவாக்கத்தில் புத்தாக்க நிறுவனமாக உள்ள கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், தனது 'சூரஜ்' ட்ரோனை வெளியிட்டுள்ளது. இந்த ட்ரோன் முழுக்க முழுக்க சூரிய எரிசக்தியில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் டிஆர்டிஓ தலைவரும், பாதுகாப்பு அமைச்சரின் முக்கிய ஆலோசகருமான டாக்டர். சதீஷ் ரெட்டி வெளியிட்டார்.

இந்த ட்ரோனில், J வடிவ இறக்கைகள் உள்ளன. மேலும், அதிநவீன ஜூம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பல்வேறு சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிகழ் நேரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 12 மணி நேரம் தொடர்ந்து செயலாற்றும் திறன் கொண்டதாகவும், 3000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் விரைவில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத்துறைகளில் பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu