ஜோஷிமத் அருகே பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிய விரிசல் 

February 20, 2023

ஜோஷிமத் அருகே பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிதாக ஏற்பட்டுள்ள விரிசலால் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட 4 புனித தளங்களுக்கான சார்தாம் யாத்திரைக்கான தேதிகளை உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. அதன்படி கேதார்நாத் கோயில் ஏப்ரல் 5ம் தேதியும் பத்ரிநாத் கோயில் 27ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. சார்தாம் யாத்திரையில் சுமார் 17 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ள இருப்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் பத்ரிநாத் நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் ஜோஷிமத் தொடங்கி […]

ஜோஷிமத் அருகே பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிதாக ஏற்பட்டுள்ள விரிசலால் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட 4 புனித தளங்களுக்கான சார்தாம் யாத்திரைக்கான தேதிகளை உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. அதன்படி கேதார்நாத் கோயில் ஏப்ரல் 5ம் தேதியும் பத்ரிநாத் கோயில் 27ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. சார்தாம் யாத்திரையில் சுமார் 17 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ள இருப்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் பத்ரிநாத் நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் ஜோஷிமத் தொடங்கி மார்வாரி வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 10 விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu