கொரோனா தடுப்பூசியால் நாட்டில் 34 லட்சம் உயிரிழப்புகள் தடுப்பு - ஸ்டான்ட்போர்ட் பல்கலை 

February 25, 2023

நாட்டில் கொரோனா தடுப்பூசியால் 34லட்சம் உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா கூறுகையில், இந்தியா திறம்பட செயலாற்றி கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மேல் இருந்து கீழ் அணுகுமுறைக்கு எதிராக அரசு பின்பற்றிய கீழ் இருந்து […]

நாட்டில் கொரோனா தடுப்பூசியால் 34லட்சம் உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா கூறுகையில், இந்தியா திறம்பட செயலாற்றி கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மேல் இருந்து கீழ் அணுகுமுறைக்கு எதிராக அரசு பின்பற்றிய கீழ் இருந்து மேல் அணுமுறை முக்கிய பங்கு வகித்துள்ளது.

மேலும் கிராமங்கள் தோறும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் 34 லட்சம் உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 1,51,407 கோடி இழப்பை தடுத்ததன் மூலம் சாதகமான பொருளாதார தாக்கத்தையும் தடுப்பூசி திட்டம் ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu