பொதுப்படையானக் கடவுச் சொற்களை மாற்ற வேண்டியதன் அவசியம்

கடவுச்சொல் என்பது உங்கள் மெய்நிகர் உலகின் திறவுகோல். இந்த நவீன யுகத்தில் நம்மிடையே எத்தனை எத்தனையோ கருவிகள், எண்ணிலடங்காச் செயலிகள்.

கடவுச்சொல் என்பது உங்கள் மெய்நிகர் உலகின் திறவுகோல். இந்த நவீன யுகத்தில் நம்மிடையே எத்தனை எத்தனையோ கருவிகள், எண்ணிலடங்காச் செயலிகள். வங்கிக் கணக்கு முதல் சமூக வலைத்தளக் கணக்கு வரை அனைத்திற்கும் கடவுச் சொற்கள்! அத்தனையையும் நினைவில் கொள்வது எளிதல்ல என்பதால், பொதுப்படையானக் கடவுச்சொல்லையோ, எளிதில் நினைவில் கொள்ளக் கூடிய கடவுச்சொல்லையோ அல்லது அனைத்துக் கணக்கிற்கும் ஒரே கடவுச் சொல்லையோ பயன்படுத்துபவர் நீங்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கானது!

‘நோர்ட்பாஸ்’ என்ற அமைப்பு நடத்திய உலகளாவிய ஆய்வில், 123456 என்று வரிசை முறையில் எண்களைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மட்டுமே கிட்டத்தட்ட 2.5 லட்சம்! அதிலும் நமது இந்திய நாட்டில் “password” என்ற சொல்லையே கடவுச்சொல்லாக வைத்திருப்போரின் எண்ணிக்கை 1.7லட்சம்!

“abc123”, “qwerty”, “India123” மற்றும் இது போன்ற எளிய கடவுச்சொற்களைச் சுலபமாகத் தகர்த்தெறிந்து விட்டு உங்கள் கணக்கில் அத்துமீறி நுழைவதற்கு ஒரு நொடிப் பொழுது போதும்! அதனால், உங்கள் மெய்நிகர் உலகு என்றென்றும் உங்கள் வசமாகவே இருந்திட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இப்படியானப் பொதுப்படையான கடவுச் சொற்கள் பயன்படுத்துவதை உடனடியாகத் தவிர்த்திடுங்கள்! இது மாற்றத்திற்கான நேரம்!

4
2
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu