சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து 40 கோடி அமெரிக்க டாலர் உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதற்காக தற்போது சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத் உக்ரைன் சென்றுள்ளார். அங்கு கீவ் நகரில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு அதிபர் முன்னிலையில் உக்ரைன் நாட்டுக்கு மனிதாபிமான மற்றும் பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தில் சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத் மற்றும் உக்ரைன் வெளியுறவு மந்திரி ஆண்ட்ரிய் எர்மேக் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதில் சவுதி அரேபியா சார்பில் உக்ரைனுக்கு 40 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.