அசோக் லேலண்ட் வாகன நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதத்தில் 32% விற்பனை உயர்வை பதிவு செய்துள்ளது. இந்தியாவில், அசோக் லேலண்ட் வாகன விற்பனை 17568 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இதுவே கடந்த வருட பிப்ரவரி மாதத்தில், 13281 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. மேலும், கடந்த ஒரு வருடத்தில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 60% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில், மொத்தமாக, 98756 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், கடந்த வருடம் 158031 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை ஒன்றிணைத்து 27% விற்பனை வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருட பிப்ரவரி மாதத்தில், 14657 எண்ணிக்கையில் இருந்த வாகன விற்பனை, நடப்பு பிப்ரவரி மாதத்தில் 18571 ஆக பதிவாகியுள்ளது. மேலும், கடந்த வருடத்தில், ஏற்றுமதியுடன் கூடிய ஒட்டுமொத்த விற்பனை 56% உயர்ந்து, 168279 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.