காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு மத்திய மந்திரி அனுராக் கண்டனம்

March 10, 2023

காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூறுகையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், இந்தியா குறித்து செய்தி வெளியிடும் போது நடுநிலையை கடைபிடிப்பதை நீண்ட நாட்களுக்கு முன்னரே நிறுத்திவிட்டது. அந்த நாளிதழ், காஷ்மீர் குறித்த செய்தியை தவறாகவும், கற்பனையாகவும் வெளியிட்டது மட்டுமின்றி, இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள் குறித்து பொய் […]

காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூறுகையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், இந்தியா குறித்து செய்தி வெளியிடும் போது நடுநிலையை கடைபிடிப்பதை நீண்ட நாட்களுக்கு முன்னரே நிறுத்திவிட்டது. அந்த நாளிதழ், காஷ்மீர் குறித்த செய்தியை தவறாகவும், கற்பனையாகவும் வெளியிட்டது மட்டுமின்றி, இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள் குறித்து பொய் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வெளியிட்டு உள்ளது.காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் செய்தி கண்டனத்திற்குரியது. இத்தகைய திட்டங்களை இந்திய மண்ணில் வெற்றி பெற இந்திய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu