பேடிஎம் நிறுவனத்தின் மாதாந்திர பரிவர்த்தனை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 89 மில்லியன் ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டின் முதல் இரு மாதங்களில், சராசரியாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது வருடாந்திர அடிப்படையில் 28% உயர்வாகும்.
பேடிஎம் நிறுவனம், தொடர்ச்சியாக, வாடிக்கையாளர் மற்றும் பரிவர்த்தனை எண்ணிக்கையில், வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், மாதாந்திர பரிவர்த்தனை மதிப்பு 2.34 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 41% உயர்வாகும். மேலும், பேடிஎம் நிறுவனத்தின் கட்டண கருவிகளுக்கான சந்தா செலுத்தும் வணிகர்கள் எண்ணிக்கை 6.4 மில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 0.3 மில்லியன் உயர்வாகும். அதே வேளையில், நிறுவனத்தின் கடன் அளிப்பு 286% உயர்ந்து, 8086 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் வழங்கிய கடன்களின் எண்ணிக்கை 94% உயர்ந்து, 7.9 மில்லியன் எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது.