ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியத்தைக் கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணிகள் மிக வேகமாக முடிக்கக்கூடிய வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, விலைமதிப்பற்ற கல்வெட்டுகளை ஒரே தளத்தின் மூலம் தெரிந்து கொள்வதற்காக டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை கட்ட சிறந்த கட்டடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.














