தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

March 15, 2023

தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் வெப்பத்தால் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவற்றை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும். அதீத வெப்பத்தால் சிகிச்சை பெறுபவர்களின் பட்டியல் ஒவ்வொரு […]

தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் வெப்பத்தால் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவற்றை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும். அதீத வெப்பத்தால் சிகிச்சை பெறுபவர்களின் பட்டியல் ஒவ்வொரு மருத்துவமனையிலும் பராமரிக்க வேண்டும்.

ஓஆர்எஸ் பாக்கெட்டுகள், ஐஸ் பேக்குகள் போன்ற அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு கையிருப்பு வைக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக குடிநீர், குளிரூட்டும் கருவிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஐஸ் பாக்கெட்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். குளிரூட்டும் கருவிகள் மற்றும் இதர சாதனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu