புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - ஒரு சவரன் 44000 -ஐ தாண்டியது

March 18, 2023

கடந்த வாரத்தில் சரிந்து வந்த தங்கத்தின் விலை இந்த வாரம் ஏற்றமடைய தொடங்கியுள்ளது. தங்கம் விலை 3 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 44000 ரூபாயை கடந்து விற்பனை ஆகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 110 ரூபாய் உயர்ந்து, 5560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே வேளையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 880 ரூபாய் உயர்ந்து 44480 […]

கடந்த வாரத்தில் சரிந்து வந்த தங்கத்தின் விலை இந்த வாரம் ஏற்றமடைய தொடங்கியுள்ளது. தங்கம் விலை 3 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 44000 ரூபாயை கடந்து விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 110 ரூபாய் உயர்ந்து, 5560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே வேளையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 880 ரூபாய் உயர்ந்து 44480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது தங்கம் விலை நிலவரங்களில் புதிய உச்சமாகும். இதற்கு முன்னர், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, ஒரு சவரன் 44040 ரூபாய்க்கு விற்பனையானது உச்சமாக இருந்தது.

இன்றைய தினத்தில், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் 48400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 74.40க்கு விற்பனை ஆகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu