அடுத்தடுத்து 2 செயற்கைக்கோள் திட்டங்களை செயல்படுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை

வெறும் 4 மணி நேர இடைவெளியில், 2 செயற்கைக்கோள் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. இரண்டு வெவ்வேறு ராக்கெட் ஏவு தளங்களில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ், செயற்கை கோள்களை நிறுவியுள்ளது. முதலாவதாக, கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் ஸ்பேஸ் போர்ஸ் பேஸ் -ல் இருந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டமைப்புக்கான 52 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவதாக, ஃபுளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, 2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் நிறுவப்பட்டன. […]

வெறும் 4 மணி நேர இடைவெளியில், 2 செயற்கைக்கோள் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

இரண்டு வெவ்வேறு ராக்கெட் ஏவு தளங்களில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ், செயற்கை கோள்களை நிறுவியுள்ளது. முதலாவதாக, கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் ஸ்பேஸ் போர்ஸ் பேஸ் -ல் இருந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டமைப்புக்கான 52 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவதாக, ஃபுளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, 2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் நிறுவப்பட்டன. SES 18, SES 19 ஆகிய 2 செயற்கைக்கோள்கள் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. இரு செயற்கைக்கோள் திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் குறைந்த உயரத்தில் நிறுவப்பட்டுள்ளன. அதே வேளையில், தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் இரண்டும், பூமியை சுற்றி வருவதற்கு ஏதுவாக, 35,700 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் வட அமெரிக்கா பகுதிகளில் 5ஜி இணைய சேவைகளுக்காக நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu