காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் - பொது மக்கள் 22 பேர் பலி

March 20, 2023

பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த […]

பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu