அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வேலை தேடும் தளமான இண்டீடில் பணிநீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் 15% பணியாளர்கள் அதாவது 2200 பேர் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிரிஸ் ஹியாம்ஸ் - ன் சம்பளம் 25% குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இண்டீட் நிறுவனம் வலைப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரையிலான சம்பள பணம் போனஸ் ஆக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை, அடுத்த இரு வருடங்களுக்கு, கொரோனாவுக்கு முந்தைய நிலை அடிப்படையில், வேலை வாய்ப்புகள் குறையும் என்று தெரிவித்துள்ளது.














