அமெரிக்காவின் ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம், உலகின் முதல் 3டி பிரிண்டட் ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டை ஏவும் முயற்சி இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாம் முறையாக, நேற்று, இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், இரண்டாம் நிலையில், குறித்த சுற்றப்பட்ட பாதையில் நிலை பெறுவதில் இந்த ராக்கெட் தோல்வி அடைந்துள்ளது. அதே வேளையில், 3டி பிரிண்டட் ராக்கெட் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, இந்த ராக்கெட் ஏவப்பட்டதே மிகப்பெரிய மைல்கல் ஆகும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், "85% 3டி பிரிண்ட் பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட டெரான் ராக்கெட் ஏவப்பட்டது எங்களின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. பல்வேறு அழுத்தச் சூழ்நிலைகளை எங்கள் ராக்கெட் தாங்கி நின்று ஏவப்பட்டுள்ளது. விரைவில் எங்கள் முயற்சிக்கு வெற்றி கிட்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.