தாம்பரம் மாநகராட்சிக்கான புதிய இலச்சினையை மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார்.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் பட்ஜெட்டை மேயர் வசந்தகுமாரி தாக்கல் செய்தார். தாம்பரம் மாநகராட்சிக்கு என தனி இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த புதிய இலச்சினையை மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி அறிமுகம் செய்து, துணை மேயர் காமராஜ் மற்றும் கமிஷனர் அழகுமீனா முன்னிலையில் வெளியிட்டார். அப்போது துணை மேயர் காமராஜ், விமான நிலையம், தாம்பரம் விமானப்படைத்தளம், மலைகள், நீர்நிலைகள், தொழில் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி இந்த புதிய இலச்சினை உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.